அறிவியல் & தொழில்நுட்பம்

சமைக்க, துணி துவைக்க வந்துவிட்டது ரோபோ: எலான் மஸ்கின் புதிய ஏ.ஐ புரட்சி!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டெஸ்லாவின் ஹ்யூமனாய்டு ரோபோவான ஆப்டிமஸ்-ன் திறன்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், ஆப்டிமஸ் எளிதாகவும் நிதானமாகவும் வீட்டு வேலைகளை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆப்டிமஸ் கரண்டியால் ஒரு பானையை கலக்குவது, தரையை சுத்தம் செய்வது மற்றும் ஒரு மேசையை தூரிகையால் சுத்தம் செய்வது மற்றும் துப்புரவு பணிகள் செய்வது போன்றவற்றை அமைதியாக செய்வது தெரிகிறது. இந்த வீடியோவை தனது எக்ஸ்தளத்தில் பகிர்ந்த எலான் மஸ்க், “The biggest product ever” எனக் குறிப்பிட்டுள்ளார்.

52 மில்லியனை கடந்த பார்வைகளுடன், இந்த வீடியோ பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. “அற்புதமான முன்னேற்றம், வாழ்த்துகள்!” என ஒருவர் மஸ்க்கை வாழ்த்தினார். “இது நம்முடைய அன்றாட வேலைகளை பார்ப்பது பற்றிய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றப்போகிறது.
“அது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஐந்தாண்டுகள்,” என ஒருவர் தங்கள் கருத்தை தெரிவித்தார்.

இந்த மனித உருவ ரோபோக்களால், நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடன மாட முடியும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடி யும். நாய்களை நடைபயிற்சி அழைத்து செல்ல முடியும், தோட்ட வேலைகளை செய்ய முடியும், வீட்டை சுத்தம் செய்ய முடியும், கடைக்கு சென்று பலசரக்கு சாமான்களை வாங்கி வர முடியும். மனிதர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும்.

இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் கண்ணாடி கிளாசில் குளிர்பானங்களை நிரப்பி பார்வையாளர்களுக்கு பரிமாறி அசத்தின. மேலும், மக்களிடம் உரையாடிய ஆப்டிமஸ், பிறந்தநாள் வாழ்த்து பாடல்களையும் பாடி பிரமிக்க வைத்தன. பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிலளித்து பாராட்டுகளையும் பெற்றன. இவற்றின் விலை 20,000 அமெரிக்க டாலர் முதல் 30,000 அமெரிக்க டாலர் வரை உள்ளது. இவ்வாறு எலன் மஸ்க் கூறியுள்ளார்.

மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் (Balance control) மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்காலத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இது உண்மையில் நாம் அறிந்த நாகரிகத்தின் அடிப்படையை மாற்றக்கூடிய ஒன்று என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரான மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்