இலங்கை முக்கிய செய்திகள்

கொழும்பில் இன்று முதல் மூடப்படும் வீதிகள்

கொழும்பில் சில வீதிகள் இன்று முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகளே மூடப்படவுள்ளன.

அந்த வீதிகளை அண்மித்த பகுதியில் நிலத்தடி குழாய் பொறுத்தம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை இதற்கு காரணம் என மாநகர பொறியியலாளர்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் 19 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையில் இருந்து ரயில் கடவை வரையிலான பகுதி மூடப்படவுள்ளது.

மேலும், பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையில் இருந்து பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி மூடப்படவுள்ளது.

அதன் மூன்றாம் கட்டத்தின் கீழ், மார்ச் 5 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையிலிருந்து பெரஹெர மாவத்தைக்கு அருகிலுள்ள ரொட்டுண்டா கார்டன் சந்தியின் பகுதி வரை மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்