அமெரிக்க அரசாங்கம் முடங்கும் அபாயம் – தடுக்க தீவிர முயற்சி
அமெரிக்க அரசாங்கம் முடங்கும் அபாயம் உள்ள நிலையில் அதனை தடுக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபை தற்காலிகச் செலவின மசோதாவை முன்னெடுத்துச் செல்ல வாக்களித்திருக்கிறது. 10 ஆண்டுகளில் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போவதைத் தடுக்க 4ஆவது முறை அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
செனட் சபையும் மக்களவையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் மசோதாவை அங்கீகரித்தால் நவம்பர் 17ஆம் திகதி வரை அமெரிக்க மத்திய அரசாங்கத் துறைகள் சிரமமின்றிச் செயல்படலாம்.
எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் அமெரிக்க அரசாங்கம் அதன் செலவினங்களுக்கு நிதியின்றித் தவிப்பதையும் அது தடுக்கும்.
உள்நாட்டில் பேரிடர் சமாளிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 6 பில்லியன் டாலரும் உக்ரேனுக்கு மேலும் 6 பில்லியன் டொலர் உதவியும் வழங்குவது குறித்த அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.