இலங்கையில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை சந்தையில் எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம், கடந்த காலங்களில் மோசமான வானிலையால் உள்ளூர் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)