பச்சை குத்திக்கொள்பவர்களுக்கு ஆபத்து – சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் lymphoma எனப்படும் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணியாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவ இதழான e Clinical Medicineஇல் வெளியிடப்பட்ட சுவீடனில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, பச்சை குத்துவதன் நீண்டகால ஆரோக்கிய விளைவுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகக் காட்டுகிறது.
பச்சை குத்திக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது, உடலில் பச்சை குத்தியவர்களுக்கு lymphoma புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பின் முடிவுகள் காட்டுகின்றன.
ஆய்வில் 1,400 லிம்போமா நோயாளிகள் உட்பட 11,000 க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
புகைபிடித்தல் மற்றும் வயது போன்ற பிற தொடர்புடைய காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, பச்சை குத்துபவர்களிடையே லிம்போமாவை உருவாக்கும் ஆபத்து 21 சதவீதம் அதிகமாக உள்ளது.
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் மற்றும் பிற வகை புற்றுநோய்களுக்கு இடையே உள்ள தொடர்பையும் ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.