வட அமெரிக்கா

தென்சீனக்கடலில் பதற்றம் அதிகரிப்பு – ஏவுகணை கட்டமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானம்

அமெரிக்கா, பிலிப்பீன்சில் வைத்துள்ள நடுநிலை தூரத்துக்கு ஏவுகணையைப் பாய்ச்சக்கூடிய ஏவுகணைக் கட்டமைப்பு முறை இப்போதைக்கு மீட்டுக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா குரல் எழுப்பிவரும் வேளையில் அமெரிக்கா இந்த முடிவில் உள்ளது. அதோடு, வட்டார அளவில் பூசல் ஏற்பட்டால் அதில் அந்த ஏவுகணை முறை எவ்வளவு ஆக்ககரமாக இருக்கும் என்பதை அறிவதற்கான சோதனைகளை அமெரிக்கா மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.இந்த விவகாரத்தின் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் இவ்விவரங்களை வெளியிட்டனர்.

டைஃபன் என்ற அந்த ஏவுகணை முறையைக் கொண்டு சீனாவைச் சேர்ந்த குறிகளைத் தாக்க முடியும். கூட்டு ராணுவப் பயிற்சிகளில் பயன்படுத்துவதற்காக அது இவ்வாண்டு தொடக்கத்தில் பிலிப்பீன்சுக்குக் கொண்டு வரப்பட்டதாக பிலிப்பீன்சும் அமெரிக்காவும் தெரிவித்திருந்தன.ஆனால் அந்த முறை தொடர்ந்து பிலிப்பீன்சில்தான் இருந்து வருகிறது.

தெற்குப் பகுதியில் தைவானின் அண்டை நாடான பிலிப்பீன்ஸ், ஆசிய கண்டத்தில் அமெரிக்கா பின்பற்றும் உத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால், தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்க பிலிப்பீன்ஸ் நிகரற்ற தளமாக இருக்கும்.இத்தகைய ஏவுகணை முறை இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். சீனாவும் ர‌ஷ்யாவும் அந்நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. வா‌ஷிங்டன், ஆயுத ஆற்றல் தொடர்பிலான போட்டியைத் தூண்டிவிடுவதாகவும் அவை சாடின.

தென்சீனக் கடலின் சில பகுதிகளில் சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் பதற்றநிலை இருந்து வருகிறது. உத்திபூர்வ நீர்ப்பாதையாகப் பார்க்கப்படும் தென்சீனக் கடற்பகுதியில் அவ்விரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.இந்நிலையில், ஏவுகணை முறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த சில தகவல்கள் இதற்கு முன்பு வெளியிடப்படவில்லை.

லுஸோன் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏவுகணை முறையைக் கொண்டு பிலிப்பீன்ஸ், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்சீனக் கடலை நோக்கியபடி அமைந்துள்ள வட லுஸோன், தைவான் நீரிணைக்கு அருகில் உள்ளது.

(Visited 44 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்