பிரித்தானியாவில் புதிய விசா விதிகள் – குடும்பங்களுக்கு பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் 38,700 பவுண்டிற்கும் குறைவாக சம்பாதிக்கும் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளைக் கொண்ட குடிமக்களுக்கான இடைநிலை ஏற்பாடுகளை அரசாங்கம் கவனித்து வருவதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
புதிய விசா விதிகள் குடும்பங்கள் பிரிக்கப்படும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு மத்தியில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அடுத்த வசந்த காலத்தில் இருந்து, பிரித்தானியா குடிமக்கள் மற்றும் குடியேறியவர்கள் வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர குறைந்தபட்சம் 38,700 பவுண்ட் சம்பாதிக்க வேண்டும்.
புதிய விதியானது ஏற்கனவே பிரித்தானியாவில் விசாவிற்கு விண்ணப்பித்தவர்களையும் உள்ளடக்கும் என்று அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தனது.
ஆனால்,கொள்கை மறுபரிசீலனை செய்யப்படுவதை பிரதமர் சுனக் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் தொழிற்கட்சி எம்பி சர் ஸ்டீபன் டிம்ஸ் கேள்வி எழுப்புகையில்,
கணவன் மனைவி விசாவுக்கான சம்பளத் தேவையில் பெரிய அதிகரிப்பு என்ற திடீர் அறிவிப்பால் ஆயிரக்கணக்கான ஜோடிகளின் திருமணத் திட்டங்கள் கடந்த வாரம் சிதைந்தன.
இப்போது பிரிக்காததாக தோன்றும் திருமணத் திட்டங்களைக் கொண்டவர்களுக்கும், புதிய விதிகளுக்கு இணங்காத தங்கள் தங்குமிடத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும் ஏற்கனவே உள்ள குடும்பங்களுக்கும் பிரதமர் ஏதேனும் உறுதியளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரதமர்,
பிரித்தானியாவை சார்ந்தவர்களைக் அழைத்து வரும் எவரும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்க வேண்டும். ஆனால் ஒரு தசாப்தத்தில் வருமான வரம்பு அதிகரிக்கப்படவில்லை. எனினும் புலம்பெயர்ந்தவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை உறுதிப்படுத்த இடைநிலை ஏற்பாடுகளை உள்துறை அலுவலகம் கவனித்து வருகின்றது. அதற்கமைய,விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.