Site icon Tamil News

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய கும்பல் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

பிரான்ஸில் 14 பேர் கொண்ட கும்பல் ஒன்றை நீஸ் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 186 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, 14 வாகனங்கள், 125,815 யூரோ ரொக்கப்பணம், இரண்டு பிஸ்டல் துப்பாக்கிகள், இரண்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு போதைப்பொருள் பொதி செய்யப்பயன்படும் நவீன இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இது தொடர்பாக செய்தியினை நீஸ் நகர வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாள் ஒன்றுக்கு 15,000 யூரோக்களில் இருந்து 20,000 யூரோக்கள் வரை பணம் சம்பாதித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version