இலங்கையில் அரிசி பற்றாக்குறை? வதந்திகள் குறித்து எச்சரிக்கை
இலங்கையில் செயற்கையான முறையில் அரிசிக்கு தட்டுப்பாட்டை செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில், இவ்வாறு செய்யப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என போலியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்த உரிமையாளர்களே, அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





