ஜெர்மனி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு – ஆய்வில் முக்கிய தகவல்
ஜெர்மனி நாட்டில் மாணவர்களின் கல்வி நிலை பின் தங்கி காணப்படுவதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் 4 ஆம் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நிலையானது மிகவும் மோசமாக உள்ளதாக I G L G O என்று சொல்லப்படுகின்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது உலகளவில் 65 நாடுகளில் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் சிங்கப்புரானது 587 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் நாடானது 537 புள்ளிகளை பெற்று நடுத்தர நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பில் 539 புள்ளிகள் ஜெர்மன் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்திருககின்றது.
உலகளவில் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் உள்ள நான்காம் வகுப்பு மாணவர்கள் மிகவும் சிறந்த முறையில் எழுதவும் வாசிக்கவும் முடிந்தவர்களாக காணப்படுவதாக இந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது ஜெர்மனியில் இவ்வாறு 25 சதவீதமான மாணவர்களுடைய நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரியவந்திருக்கின்றது.