ஜப்பானில் ATM பயன்படுத்தும் போது அமுலாகும் தடை

ஜப்பானில் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை விதிக்கப்படவிருக்கிறது.
ஒசாகா நகரில் மூத்தோர் தானியக்க வங்கி இயந்திரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அது பொருந்தும்.
அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களைக் கையாள அந்தப் புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.
சென்ற ஆண்டு மோசடிச் சம்பவங்களில் இழக்கப்பட்ட தொகை இதுவரை இல்லாத அளவாகச் சுமார் 500 மில்லியன் டொலரை எட்டியது.
வயதானோர் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடிக்காரர்கள் வயதானோரை ஏமாற்றுகின்றனர்.
ஒசாகாவில் புதிய தடை ஒகஸ்ட் மாதம் நடப்புக்கு வரும். ஆனால் தடையை மீறுவோறுக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படமாட்டாது.
ஜப்பானில் அத்தகைய தடையை நடப்புக்குக் கொண்டுவரும் முதல் நகரம் ஒசாகா.