செய்தி விளையாட்டு

4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு ..?

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது.

கடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது போல, 3வது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கும் ஓய்வு அளிக்கப்படுவதாக இருந்தது.

அந்நிலையில், இந்திய அணியில் பந்து வீச்சாளரின் தேவை காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியிலும் பும்ரா விளையாடினார். பும்ரா இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி 13.64 சராசரிகளுடன் உள்ளார்.

நடைபெறவிருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு பதிலாக இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, முகேஷ் குமார் ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார்.

அவர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் இந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி