ஜெர்மனியில் பணத்திற்காக விற்கப்படும் வதிவிட விசா – சிக்கிய கும்பல்
ஜெர்மனியில் பணத்திற்காக விற்கப்படும் வதிவிட விசா விற்கப்படும் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹம்பேர்க் நகரத்தில் அமைந்து இருக்கின்ற வெளிநாட்டவர்கள் விடயங்களை கவனிக்கும் அலுவலகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியில் ஹம்பேர்க் நகரத்தில் உள்ள வெளிநாட்டவர் காரியாலயத்தில் கடமையாற்றிய 2 பணியாளர்கள் ஹம்பேர்க் அரச தரப்பு சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இவ் இரு பணியாளர்களும் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் பணத்துக்காக வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசாவை விற்பனை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது இவர்கள் பணத்துக்காக வதிவிட விசாவை விற்றதுடன், பணத்தை பெறுவதற்கு இடை தரகர் ஒருவரை ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு எதிராக அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற சிலர் இரகசியமா முறையில் அரச தரப்பு சட்டத்தரணிக்கு வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த பொலிஸாரால் அலுவலகமானது முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் இருந்து பல பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமான முறையில் வதிவிட விசாவை பெற்றுக்கொண்ட 8 பேருக்கு எதிராக விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.