கனடா வாழ் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கனடாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் துஷார ரொட்ரிகோ வலியுறுத்தியுள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் கனேடிய பொருளாதாரம் மற்றும் கனடாவின் கலாசாரத்தில் பாரிய சக்தியாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வலுவான தமிழ் வர்த்தக சமூகமும் இளம் தமிழ் தொழில் வல்லுநர்களும் இலங்கைத் தமிழர்களை கனேடிய சமூகத்துடன் இலகுவாக இணைப்பதற்கான சக்தியாக உள்ளனர் என்றும் துஷார ரொட்ரிகோ குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்து 500க்கும் அதிகமான கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.