சிங்கப்பூரில் மூத்தோர் முடிந்தால் வேலைக்கு திரும்புமாறு கோரிக்கை

சிங்கப்பூரில் அதிகமான மூத்தோர் முடிந்தால் வேலைக்குத் திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சர் Tan See Leng இதனை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
எடுத்துக்காட்டுக்கு, 55 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலையில் சேர்த்துக்கொள்வதற்கு முதலாளிகளை ஊக்குவிக்கும் புதிய மசோதா அடுத்த 2 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்பதை அவர் சுட்டினார்.
வயதை வைத்துப் பாரபட்சம் காட்டுவதைத் தடுக்கும் புதிய வேலையிட வழிகாட்டிகளும் இவ்வாண்டு நடப்புக்கு வரும். சமூகத்தோடு இணைந்திருக்கும்போது நீண்ட ஆயுளோடு, சுகாதாரமிக்க வாழ்க்கையும் வாழலாம் என்றார் அவர்.
மக்கள் செயல் கட்சியின் மூத்தோர் குழு தொண்டூழியர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் Tan See Leng பேசினார்.
(Visited 9 times, 1 visits today)