அமெரிக்காவில் இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகளை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை

அமெரிக்காவின் இராணுவத்தில் பணிபுரியும் திருநங்கை வீரர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 6ஆம் திகதிக்குள் வேலையிலிருந்து தாமாகவே விலகவில்லை என்றால் அவர்களைப் பணியிலிருந்து நீக்குமாறு அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டுள்ளார்.
அது குறித்து அமைச்சு கருத்து வெளியிடவில்லை. திருநங்கை உரிமை ஆர்வலர் குழுக்கள் அத்தகைய நடவடிக்கைக்குக் கண்டணம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கத் இராணுவத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கை உறுப்பினர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கான தடையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அகற்றியது.
ஜூன் 6 ஆம் திகதிக்குள் அமெரிக்க ஆயுதப்படையில் இருந்து சொந்தமாக அவர்கள் வெளியேறலாம்.
போர்க்காலப் படையினருக்கு ஜூலை 7ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)