வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் உருவப்படம் அகற்றம் – டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

வெள்ளை மாளிகையின் நுழைவாயிலில் இருந்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
டிரம்பின் உத்தரவின் பேரில் பார்வையாளர்கள் பொதுவாக காண முடியாத இடத்திற்கு உருவப்படம் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றம், டிரம்ப் மற்றும் ஒபாமாவுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகளை மீண்டும் முன்வைத்து உள்ளது.
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தன்னை ஆதரிக்க ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டே வதந்திகளை பரப்பியது என டிரம்ப் குற்றம்சாட்டினார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல், டிரம்ப், பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோரின் உருவப்படங்களையும் வெள்ளை மாளிகையின் பிரதான பகுதியிலிருந்து மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகை என்பது அரசியல் கண்ணோட்டங்களைத் தாண்டிய, நாட்டின் வரலாற்று நினைவுகளின் பகுதியாகவும் கருதப்படுகிறது.
எனவே, இந்த வகை மாற்றங்கள், அரசியல் சாயலுடன் பார்வையிடப்படுவதும், கலந்துரையாடல்களுக்கு வழிவகுப்பதும் வழக்கமானதாகும்.