வெளிநாட்டுப் பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது
வெளிநாட்டுப் பணியாளர்கள் இந்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு 74.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் 3,862,700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
2022 இல் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 74.4 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூலை மாதம், நாடு 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுள்ளது.
இது 2022ல் இருந்து இரண்டு மடங்கு அதிகமாகும். இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.