இந்தியா செய்தி

காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த உறவினர்கள்

உத்திரமேரூர் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்த உறவினர்கள் ஐந்து பேருக்கு தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாயும் அபராதமாக பிரித்து தீர்ப்புஅளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா புத்தளி கிராமத்தில் தாய் தந்தை இல்லாமல் பாட்டி வீட்டில் வசித்துக் கொண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை மிரட்டி அதே ஊரைச் சேர்ந்த சிறுமியின் உறவினர்கள் ஐந்து பேர் மிரட்டி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து , அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவனை சிறுமியின் உறவினர்கள் 5 பேரையும் 2017 ஆம் ஆண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் பிணையை பெற்று உறவினர்கள் 5 பேரும் வெளியே வந்த நிலையில் , வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்பு வாதிடப்பட்டு வந்த நிலையில் , அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி குற்றத்தினை சாட்சியாக ஆதாரங்களோடு நிரூபித்த காரணத்தால் சிறுமியின் உறவினர்கள் ஐந்து பேருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி புத்தளி கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கு பத்து வருட சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் , கிருஷ்ணன் மற்றும் சுப்பராயன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், திருநாவுக்கரசு மற்றும் தாமஸ் என்கின்ற ராமச்சந்திரன் ஆகியோருக்கு பத்து வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார் .

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஏற்கனவே மூன்று லட்ச ரூபாய் வழங்கிய நிலையில், தற்பொழுது மேலும் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கை சிறப்பாக கையாண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரை மாவட்ட எஸ்.பி சுதாகர் வெகுவாக பாராட்டினர்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி