இலஞ்சம் பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய போக்குவரத்து முகாமையாளர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை கைது செய்துள்ளது.
15,000 பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள SLTB பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக சந்தேக நபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிராந்திய போக்குவரத்து முகாமையாளருக்கு எதிராக பாணந்துறை டிப்போவின் பஸ் சாரதி முறைப்பாடு செய்திருந்தார்.
கைது செய்யப்பட்டவர் நாளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)