சிரியாவில் ஆட்சி மாற்றம் – புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரான்ஸ் எடுத்த தீர்மானம்

பிரான்ஸ் புகலிட கோரிக்கை முன்வைத்துள்ள சிரியா நாட்டவர்கள் அனைவருக்கும் அதனை நிராகரிக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சிரியாவில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிரியாவின் ஜனாதிபதி Bashar al-Assad, நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். அங்கு கிளர்ச்சிப்படைகள் தலைநகரை முற்றுகையிட்டுள்ளன.
இந்நிலையில், பிரான்சில் வசிக்கும் சிரியாவைச் சேர்ந்த அரசியல் அகதிகளுக்கான புகலிடக்கோரிக்கைகளை முழுவதுமாக இரத்துச் செய்ய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)