ஐரோப்பா

பிரான்ஸில் தங்குமிடம் கோரிய அகதிகள் கைது!

பிரான்ஸில் 15 பேர் வரையான அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது.

தங்குமிடம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு பரிசில் உள்ள நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக குவிந்த 150 வரையான அகதிகள், ‘அவசரகால தங்குமிடம்’ கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது ஆர்ப்பாட்டம் பொது போக்குவரத்தினை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டு அவர்களில் 15 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

அகதிகள் கைது செய்யப்பட்டமைக்கு Nikolaï Posner எனும் அகதிகள் நல தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது.

கைக்குழந்தைகளோடு இருந்த பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!