மெக்சிகோ செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
மெக்சிகோவில் வௌவால் கடித்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Michoacan மாநிலத்தில் உள்ள Aquila நகராட்சியில் கொடிய விஷத்தன்மை கொண்ட வௌவாலின் தாக்குதலுக்கு உள்ளான 13 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஆண்டிரேபிஸ் தடுப்பூசி பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை வௌவால் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் வைத்திய சிகிச்சைகளை பெறவில்லை என்றும் உடல்நிலை மோசமாகியதைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது வைரஸ் தாக்குதல் ஏறக்குறைய 90 சதவீதம் உடல் முழுவதும் பரவியிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 26 times, 1 visits today)





