எம்.பி அலி சப்ரி ரஹீமிடம் இருந்து பெருமளவு கடத்தல் பொருட்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வசம் இருந்த கைத்தொலைபேசிகளையும் சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அவரது பயணப் பையில் 91 புத்தம் புதிய கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதுடன் அதன் பெறுமதி ஐம்பது இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளது.
அவர் இலங்கைக்கு கொண்டு வந்த தங்கத்தின் பெறுமதி சுமார் ஏழரை கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அவர் ஒருகுடவத்த சுங்க அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டுபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து பிரமுகர் முனையம் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த பொருட்கள் சிக்கியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)