பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ நீரோட்டம் – வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை
உலகளவில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கவுள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் பசுபிக் பெருங்கடல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலுக்கு அமைதியான கடல் என்ற பெயரும் உண்டு.
உலக அளவில் தற்போதைய பருவநிலை மாற்றங்களால் உலக அளவில் பல்வேறு இயற்கை பேரிடர்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஐ நா அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
அதன் காரணமாக உலக அளவில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. ஜூலை மாத இறுதியில் இந்த எல் நினோ நீரோட்டம் 60 சதவீதம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஜூலை மாதம் வரை வராமல் இருந்தால் செப்டம்பர் மாத இறுதியில் 80 சதவீதம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடித்துள்ளது.