நியூயோர்க் நகரம் முழுவதும் ஓடித்திரியும் எலிகள் – அச்சத்தில் மக்கள்

அமெரிக்கா – நியூயோர்க் நகரம் தற்போது கடுமையான எலித் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் வீதிகள், சுரங்கப்பாதைகள், நடைபாதைகள் எங்கு பார்த்தாலும் எலிகள் சுதந்திரமாக ஓடிக்கொண்டு இருப்பது தற்போது வழக்கமான காட்சியாகிவிட்டது.
“சற்று முன்புதான் குப்பையை வெளியே வைக்கச் சென்றேன். ஒரே நேரத்தில் ஐந்து எலிகள் வெளியே குதித்தது. குப்பையை கீழே போடவே பயந்துவிட்டேன் என கூறும் ஜெசிகா சான்செஸ் என்ற குடியிருப்பாளர், அந்நகர மக்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் தற்போது நிலைமை மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெரும் சவாலைக் கட்டுப்படுத்தும் வகையில், நகர நிர்வாகம் 70 ஆய்வாளர்களைக் கொண்ட சிறப்பு குழுவை நியமித்துள்ளது. அவர்கள் மொபைல் செயலியின் உதவியுடன் எலிகளின் இயக்கங்களை கண்காணித்து, அதற்கேற்ப கட்டுப்பாட்டு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.
மேலும் வீடு வீடாகச் சென்று மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், தங்கள் கட்டிடங்கள், கடைகள் மற்றும் நடைபாதைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். எலி கட்டுப்பாட்டிற்கான பயிற்சி அமர்வுகளும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
நாம் உணவுக் கழிவுகளைத் தவிர்க்கச் செய்யும் விதமான திட்டங்களால், எலிகள் உணவிற்காக நீண்ட தூரம் பயணிக்கின்றன. உணவின்றி அவை ‘மன அழுத்தத்துக்குள்ளாகின்றன. இனப்பெருக்கமும் குறைகிறது என நகர சுகாதாரத் துறையின் அதிகாரி கரோலின் பிராக்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு எலிக்கு தினசரி 28 கிராம் உணவு தேவைப்படும் நிலையில், உணவுக்கிடையாமை அவற்றை நகரம் முழுவதும் அலைவதாக அவர் கூறியுள்ளார்.