இந்தியா

மத்திய பிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளைக் கடித்துக் குதறிய எலிகள்

மருத்துவமனையில் சுற்றித்திரிந்த எலிகள், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரு பச்சிளங் குழந்தைகளைக் கடித்துக் குதறிய சம்பவம் மத்​தியப் பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள இந்​தூர் நகரில் மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனை செயல்​பட்டு வருகிறது. அம்மருத்​து​வ​மனை​யில் பச்​சிளம் குழந்​தைகளுக்கு என சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது.

அங்கு அண்மையில் பிறந்த இரு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தைகளை எலிகள் கடித்துக் குதறியது தெரிய வந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆகப்பெரிய மருத்துவமனை எனப் பெயர் வாங்கியுள்ள நிலையில், மருத்​து​வ​மனை நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கண்டிப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்​து​வ​மனை கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் யாதவ் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் சம்​பவம் குறித்து தெரிய​வந்​ததும், குழந்தைகளை வேறு பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உத்​தர​விட்​டதாகவும் எலிப் பிரச்​சினை உடனடி​யாக சரிசெய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே