இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ரத்தன் டாடாவுக்குப் பிரியாவிடை கொடுத்த வளர்ப்பு நாய்

இந்தியாவின் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமான நிலையில் அவரது மறைவு குறித்துப் பல பிரபலங்களும் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்அவர் பிரியமாக வளர்த்த நாய் ‘Goa’ அவருக்குப் பிரியாவிடை கொடுத்திருக்கிறது.

செல்லப் பிராணிகளின் மேல் மிகுந்த அன்பு கொண்டவர் ரத்தன் டாடா, ஒரு செல்லப் பிராணி இறந்துவிட்டால் அந்தத் துயரத்தை மறக்க அதிகக் காலம் பிடிக்கும் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதற்கமைய, சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் கோவாவிற்குச் சென்றபோது Goa-வை மீட்டு வளர்த்து வந்தார்.

2018இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் (Buckingham Palace) அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படவிருந்தது. அவர் புறப்படத் தயாரானார்.

அந்த நேரத்தில் அவரது நாய்க்கு உடல்நலம் குன்றியதால், அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீட்டில் இருந்து வளர்ப்புப் பிராணியைக் கவனித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!