இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் பரவியுள்ள எலிக் காய்ச்சல் நோய் விலங்குகளிலும் பரவக் கூடிய அபாயம்

வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பாக்டீரியாக்கள் வாழும்.

எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவானது மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து பரவ வாய்ப்புள்ளது. மழைக் காலங்களில் குடி நீர்க்கிணறுகளில் கூட தொற்றுக் கிருமிகள் கலக்கக்கூடும்.

தொற்றடைந்த நீரைப் பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் இந்த பாக்றீரியாக்கள் உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது. இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளன.

குறித்த லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் பாற்றீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு விலங்குகளில் பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை