பெருவில் பரவி வரும் அரிய வகை நோய் – அவசரநிலை பிரகடனம்!
பெருவில் 90 நாட்களுக்கு தேசிய சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நரம்பியல் சம்பந்தப்பட்ட Guillain-Barre என சொல்லப்படுகிற ஒரு அரியவகை நோய் பரவி வருதாக கூறப்படுகின்ற நிலையில், இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, குறித்த நோய் காரணமாக 165 வழக்குகள் பதிவாகியுள்ளன. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் குறித்து கடந்த ஜுன் மாதம் எச்சரிக்கை விடுத்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Guillain-Barre சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறு ஆகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்குகிறது.
இது கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு மற்றும் பலவீனத்துடன் தொடங்குகிறது, மேலும் விரைவாக பரவி உடலை முடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)