இலங்கை

தேர்தலில் தமது செல்வாக்கை இழக்கும் ரணில் : சாணக்கியன் கருத்து!

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை களமிறக்கபோவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை  மடியில் வைத்துக்கொண்டிருப்பாரானால் ஜனாதிபதி அவரின் செல்வாக்கினை இழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து பல்கழைக்கழகம் சென்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கான நிதியுதவி வழங்கள் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி நகர தலைவர் அ.கந்தவேள், வளைகுடா வானாம் பாடிகள் அமைப்பின் தலைவர் கர்ணன் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்கழைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!