Site icon Tamil News

இழப்பீடு கொடுக்க ராஜபக்சர்களிடம் ஏராளமான பணம் உள்ளது! சுமந்திரன் எம்.பி

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே போதுமான பணம் வைத்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி., பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

மேலும், ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே உள்ள பணத்தில்தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்த எம்.பி., “நாட்டிற்கு வெளியில் உள்ள அவர்களின் அனைத்து பணத்தையும் கொண்டு வர முடியும். அந்தப் பணத்தைக் கொண்டுதான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

அப்போதைய ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலர் பொதுப் பணத்தை திருடியதால் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது என்றார்.

இதேவேளை, திருடப்பட்ட பணத்தை திறைசேரிக்கு கொண்டு வந்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நட்டஈடு வழங்குமாறும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடுமாறும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version