இலங்கை செய்தி

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

 

இலங்கையில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40,657 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை சுத்தப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!