புகையிரத வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது – போக்குவரத்து அமைச்சு

புகையிரத சேவைகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அதிபர்கள் சங்கம் முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு சட்டவிரோதமானது என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடமைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம் காரணமாக அலுவலக புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டால், இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபசிங்க தெரிவித்தார்.
அதன்படி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் புகையிரத சீசன் டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
(Visited 30 times, 1 visits today)