சீறிப்பாய்ந்த காளைகள் சிதறிய வீரர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
இதில் பங்கேற்க புதுக்கோட்டை, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டது.
சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடங்கினர்.
வெற்றிபெற்ற மாடுகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இம்மஞ்சுவிரட்டு போட்டியில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அரிமளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வீரர்கள் பார்வையாளர்கள் என சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டு போட்டியினை கண்டு ரசித்தனர்.
(Visited 15 times, 1 visits today)