பிரெஞ்ச் ஓபனில் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெளியேறினார்

பாரீஸ்: முன்னாள் சாம்பியன் ரஃபேல் நடால், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
ரஃபேல் நடால், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் நேர் செட்களில் (ஸ்கோர் -3-6, 6-7(5), 3-6.) தோல்வியடைந்தார்.
பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றிலேயே ரஃபேல் நடால் வெளியேறுவது அவரது வாழ்க்கையில் இதுவே முதல் முறை. 2
005ல் அறிமுகமான ஸ்பெயின் வீரராக அவருக்கு பிரெஞ்சு ஓபனில் இது நான்காவது தோல்வியாகும்.
நோவக் ஜோகோவிச் மற்றும் ராபின் சோடர்லிங்கிற்குப் பிறகு, ரோலண்ட் கரோஸில் நடாலை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆவார்.
காயத்தால் பாதிக்கப்பட்ட நடால் 2022 இல் பாரிஸில் பட்டம் வென்ற பிறகு முதல்முறையாக விளையாடியிருந்தார். அவர் 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 31 times, 1 visits today)