குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்
சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக சாம்பியனான குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா கைப்பற்றியுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின்னர் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையை இதன் மூலம் தனதாக்கிக்கொண்டுள்ளார்.
டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87ஆவது சீசன் நெதர்லாந்தில் நடைபெற்றது.





