மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தில், மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்று(13.06.2023) காலை நடைபெற்றது.
நுகர்வோரிடம் பணம் இல்லாத சந்தர்ப்பங்களிலும் QR முறையின் கீழ் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நிலைமை இதன் விசேட அம்சமாகும்.
இதேவேளை ஒவ்வொரு வாரமும் ஒரு தினத்தில் விசேட விலைக்குறைப்பின் கீழ் ஒருவகை மீனை வழங்குவதற்கு கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)