இஸ்ரேல் பிரதமரின் ஆடையில் QR குறியீடு – ஸ்கேன் செய்தவர்களுக்கு கிடைத்த தகவல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆடையில் இருந்த QR குறியீடு பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் போது இந்த QR குறியீட்டினை காண முடிந்துள்ளது.
காசாவில் போர் தொடங்கியதிலிருந்து தனது நாட்டின் நடவடிக்கைகளை நன்கு புரிந்துகொள்ள, குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
அதற்கமைய, குறியீட்டை ஸ்கேன் செய்தால், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் கொடூரமான படங்கள் மற்றும் காணொளிகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்திற்கு செல்லும்.
வலைத்தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கும் எச்சரிக்கை அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
சபையில் உரையாற்றிய நெதன்யாகு, உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒக்டோபர் 07 இப்போது நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் அதை நினைவில் கொள்கிறோம். இஸ்ரேல் நன்றாக நினைவில் கொண்டுள்ளது.
நாம் ஏன் சண்டையிடுகிறோம்? நாம் ஏன் வெல்ல வேண்டும்? இதையெல்லாம் நீங்கள் இந்த குறியீட்டினுள் செல்வதன் ஊடாக காண்பீர்கள். இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், காசா மற்றும் பிற இடங்களில் இஸ்ரேல் தனது எதிரிகளுடன் ஏன் தொடர்ந்து போராடுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ஹமாஸ் செய்ததாக வலைத்தளம் குற்றம் சாட்டுகிறது.





