ஈரானுக்குப் பதிலடி கொடுக்க தயாராகும் கட்டார் – தாக்குவதற்கு உரிமை உள்ளதாக அறிவிப்பு
அல் உதேய்த் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தனது அரசுரிமை, வான் வெளி, சர்வதேச சட்டம், ஐக்கிய நாட்டுச் சாசனம் ஆகியவற்றின் மீதான அத்துமீறல் என்று கட்டார் வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மஜேட் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஏவுகணைகளைக் கட்டார் வெற்றிகரமாக இடைமறித்ததாக கூறிய அவர், தளத்திலிருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தாக்குதலை மதிப்பிட்டு உரிய பதிலடி கொடுக்கும் உரிமை கட்டாருக்கு இருப்பதாக மஜேட் கூறினார்.
அல் உதேய்த் விமான படைத் தளம் மீது குறுந்தொலைவு, மத்திய ரக தாழப் பறக்கும் ஏவுகணைகளை ஈரான் பாய்ச்சியதாக அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
நிலைமையை ஆராய்ந்து வருவதாகத் தற்காப்பு அமைச்சின் ஓர் அதிகாரி கூறினார்.
(Visited 26 times, 1 visits today)





