ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை – பாதுகாப்பு துறையில் ஊதியங்கள் குறைப்பு

உக்ரைன் மீதான போர் ஆரம்பித்ததன் பின்னர் முதல் முறையாக, ரஷ்ய பாதுகாப்புத் துறையில் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகள் வரையில் அரசு முதலீடுகள் மூலம் ஆயுதத் துறையில் வெகுவாக வளர்ச்சி காணப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, தொழிற்சாலைகள் முழுத் திறனுடன் இயங்கிய நிலையில், மேலும் விரிவடைய தேவையான வசதிகள் மற்றும் முதலீடுகள் இல்லாததால், வளர்ச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் ஊதியங்கள் குறைவடைந்துள்ள நிலையில், சராசரி ஊதியங்கள் மொத்த ரஷ்யாவிலோ தொடர்ந்து உயரும் நிலையில் இருக்கின்றன.
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தவிர, மற்ற உற்பத்தித் துறைகளில் ஓர்டர்கள் குறைவடைந்து வருவதாகவும், முந்தைய உற்பத்தி இருப்புகளும் இழைவடைவதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
அமெரிக்க போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாவது, போரை நடத்த பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட முதலீடு பணவீக்கம் உள்ளிட்ட ரஷ்ய பொருளாதார சிக்கல்களைத் தூண்டியுள்ளது.
விரிவாக்கம் எளிதாக சாத்தியமில்லாத நிலையில், புடின் நிர்வாகம் உக்ரைன் போர்முனை தேவைகளை மட்டும் முன்னிலைப்படுத்தி வருகிறது.