போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் – புட்டின் எச்சரிக்கை

பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடந்த ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
சீனா தனது இராணுவ சக்தியை உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், தனது சமீபத்திய ஆயுதங்களையும் வெளியிட்டது.
இதற்கிடையில், உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)