பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை நிலைநிறுத்தும் புட்டின்!
பெலாரஸில் (Belarus) அணுசக்தி திறன் கொண்ட இடைநிலை தூர ஓரெஷ்னிக் (Oreshnik) ஏவுகணைகளை நிலைநிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விளாடிமிர் புடினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் புட்டினின் செயற்பாடு அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே புட்டினின் இல்லத்தின் மீதான ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





