2024 ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின்: வெளியான அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதாக அரச செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
71 வயதான புதின், கிரெம்ளினில் ராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து, பிரதமர் அல்லது ஜனாதிபதியாக தனது 24 ஆண்டுகால ஆட்சியை நீட்டிக்க முயல்வதாக தனது முடிவை அறிவித்ததாக அரசு நடத்தும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ரஷ்யா மார்ச் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாள் வாக்களிக்கும் காலத்தை அறிவித்தது, மத்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 முதல் 17, 2024 வரையிலான திகதிகளை அங்கீகரித்துள்ளது.
71 வயதான புடின் இதுவரை 4 முறை தொடர்ந்து அதிபர் பதவியில் உள்ளார்.
அவர் 5வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அடுத்த 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டத்திருத்தம் பெற்றுள்ளார். இதன் மூலம் 2036 வரை புடின் அதிபராக நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.