பஞ்சாப் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

பஞ்சாபில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, பஞ்சாப் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பஞ்சாப் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி போன்ற ஆறுகள் மற்றும் பருவகால ஓடைகள் பெருக்கெடுத்ததன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சமீபத்திய நாட்களில் பஞ்சாபில் பெய்த கனமழை நிலைமையை தீவிரப்படுத்தியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)