மாகாணசபைத் தேர்தல் – தயார் நிலையில் அரசாங்கம்!
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது. அதனால்தான் வரவு- செலவுத் திட்டத்தில்கூட 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தன்னால் கூற முடியாது எனவும், தேர்தலை நடத்தும் முறை தொடர்பில் நாடாளுமன்றமே சட்டம் இயற்றி தனக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், கட்சி தலைவர்கள் இணைந்து பொருத்தமான தேர்தலை முறைமையை முன்மொழிந்தால் அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார். சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது.
அதனை ஜனாதிபதி செய்ய முற்பட்டால்தான் சர்வாதிகாரம். அதனை செய்வதற்கு நான் தயாரில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
(Visited 4 times, 4 visits today)




