மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று நாடாளுமன்று உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஏனெனில் சிறுபான்மையினக் கட்சிகள் இதற்கு இடமளிக்காது. அக்கட்சிகளின் அனுமதியுடன்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும்.
அதேபோல மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்குரிய முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.” – என்றார்.
அதேவேளை, எல்லை நிர்ணயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையாலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என அரச தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது.





