இலங்கை

50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதை நிரூபித்து காட்டுங்கள் – சஜித் சவால்!

பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தேர்தலை நடத்தி அதன் ஊடாக அறிந்து கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

உத்தகந்த – சதாநீலகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து தமது துயரங்களுக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை எவ்வித அச்சமும் இன்றி ஆட்சியிலிருந்து துரத்தியடித்தனர்.

மக்கள் தேர்தலை நம்பவில்லை என்று ஜனாதிபதி புதுமையானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதியின் இந்தக் கருத்து எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.

முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்திப் பாருங்கள். யாருக்கு 50 சதவீதம் காணப்படுகிறது என்பது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்