அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் கைது – கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பரபரப்பு
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிகாகோ நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான குடியேறிகளை அடைத்து வைத்த முகாமின் வெளி பகுதியில் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது 5வது வார போராட்டமாகும். மேலும் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையை எதிர்த்தும் மக்கள் குரல் கொடுக்கின்றனர்.
சிலர் பொலிஸாரின் தீவிர நடவடிக்கையை எதிர்பார்த்து பாதுகாப்பு உடையுடன் வந்திருந்தனர்.
இந்த போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பதிலளிக்குமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
(Visited 5 times, 1 visits today)





