இலங்கை செய்தி

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்த கோரி போராட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு தெரிவித்து இறால் பண்னணக்கு முன்னால் இன்று நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம், இறாலோடை ஆகிய மீனவ அமைப்புக்கள் இணைந்து குறித்த இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று காயன்கேணி பழைய பாலத்துக்கு அருகில் 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து அசுத்தப்படுத்தாதே வாவி நீரை அசுத்தப்படுத்தாதே, அழிக்காதே அழிக்காதே மீன் வளத்தை அழிக்காதே, ‘சுத்தமான காற்றை சுவாசிக்க விடு’ ‘மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, போன்ற பதாதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட ஊர்வலமாக இறால் பண்னைக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது வட்டவான் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையினால் குறித்த வாவி அசுத்தமடைந்து வருவதாகவும், குறித்த இறால் பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினால் ஆற்றில் மீன்கள் இறந்து காணப்படுவதுடன் மீன் இறால் வளங்கள் அழிந்து கொண்டு போவதினால் தங்கள் பொருளாதார ரீதியில் பின்நோக்கி போவதாகவும்.இது தொடர்பாக யாரிடம் முறையிடுவது என்றும் தெரியாமல் உள்ளதாகவும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதனை கவனத்தில் எடுத்து இப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆர்பாட்டகாரர்கள் கருத்து தெரிவித்ததுடன் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து விலகி சென்றனர்.

(Visited 19 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை